இலங்கையில் காணிகளின் விலை குறையும் சாத்தியம் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 30, 2024

இலங்கையில் காணிகளின் விலை குறையும் சாத்தியம்

பூர்வீக நிலத்தில் ஒரு அங்குல நிலத்துக்கு கூட உரிமை இல்லாதிருந்த 24 இலட்சம் குடும்பங்களுக்கு தற்போது “உறுமய” என்ற காணி உறுதி வழங்கப்படுவதால், நாட்டில் காணிகளின் விலை குறையும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கத்துக்குச் சொந்தமான பெருமளவிலான காணிகளை 24 இலட்சம் பேருக்கு மாற்றுவதனூடாக இது நாட்டிலேயே மிகப்பெரிய தனியார் மயமாக்கல் வேலைத்திட்டமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம், காணிகணை இழந்திருந்த மக்களில் பெரும் பகுதியினர் காணிக்கான உரிமையை பெறுவதன் ஊடாக காணியின் தேவை குறைவதால், தனியாக காணி சொந்தமாக இருக்க வேண்டும் என்ற ஆசை குறைந்துள்ளதால், நிச்சயம் காணியின் விலை குறையுமென சந்தை நிலை ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

நாட்டிலேயே அதிகளவான காணிகளைக் கொண்ட புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணி விவசாய நடவடிக்கைகள், கைத்தொழில்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்காக நீண்டகால குத்தகை அடிப்படையில் மக்களுக்கு கையளிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், முந்தைய வரவு, செலவுத்திட்ட ஆவணத்தில் ஸ்டேஷன் பிளாசா என்ற கருத்தாக்கம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், காணியை மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையை ஜூலை மாதம் 15 ஆம் திகதி நிறைவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. 

அத்துடன் மகாவலி மற்றும் ஏனைய அமைச்சுக்களுக்குச் சொந்தமான காணிகளை குறிப்பிட்ட திட்டங்களுக்காக நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்க மதிப்பீட்டாளர்களின் மதிப்பிடப்பட்ட மதிப்பின் அடிப்படையில் காணிகளை குத்தகைக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் எந்தவொரு இடைத்தரகர் அல்லது அரசியலும் இன்றி பயனுள்ள திட்டங்களுக்காக காணியை வைத்திருப்போர் அது தொடர்பில் அமைச்சகங்களுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதன் மூலம் குத்தகை அடிப்படையின் அரசாங்க நிலத்தைப் பெற முடியும். 

இந்நிலைமையின் அடிப்படையில் தற்போது தனியார் காணி வியாபாரம் தொடர்பில் விளம்பரங்கள் வெளியிடப்படுகின்ற போதிலும் காணி விலை கேட்கின்றார்களே தவிர காணிகளை கொள்வனவு செய்ய மக்கள் முன்வருவதில்லை என சந்தை ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment