மாலிங்க தேடிய பைனாஸின் இல்லத்துக்கு ரிஷாட் விஜயம் - News View

About Us

Add+Banner

Monday, June 10, 2024

demo-image

மாலிங்க தேடிய பைனாஸின் இல்லத்துக்கு ரிஷாட் விஜயம்

448124957_1013643660108752_8221882855517489871_n%20(1)
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்கவின் முகநூல்\ காணொளியின் மூலம், நாடு முழுவதும் அறியப்பட்டு புகழ்பெற்ற அநுராதபுரம், ஹொரவபொத்தானை, பத்தாவ பிரதேசத்தின் இளம் கிரிக்கெட் வீரர் பைனாஸின் இல்லத்திற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கடந்த சனிக்கிழமை (9) விஜயம் மேற்கொண்டதுடன், பைனாஸின் திறமையை பாராட்டி, வாழ்த்தி, ஒரு தொகை பணத்தையும் வழங்கிவைத்தார்.

அத்துடன், பைனாசின் எதிர்கால கல்விச் செயற்பாடுகள் மற்றும் கிரிக்கெட்டில் அவருக்குள்ள ஈடுபாடு, அதீத திறமை குறித்து கேட்டறிந்துகொண்ட தலைவர் ரிஷாட், அவரின் எதிர்கால முன்னேற்றத்துக்கு தன்னால் முடிந்த ஒத்துழைப்புக்களை வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்தார்.

இதன்போது, இளம் வீரர் பைனாசின் பெற்றோர், உறவினர்கள், சக விளையாட்டு வீரர்கள் மற்றும் ஊர்மக்கள் என அனைவரும் அங்கு ஒன்றுகூடியிருந்ததுடன், தலைவர் ரிஷாட் பதியுதீன் அவர்களுக்கு தங்களது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டனர்.

இந்த சந்திப்பில் மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான ஹைருதீன், நிஸ்தார் மற்றும் இல்ஹாம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
448176666_1013644073442044_5805050200973974182_n
448175575_1013643210108797_5160338003303843338_n
448123420_1013643900108728_4067247510204432955_n
448123767_1013643600108758_630663028954695798_n
448178040_1013644190108699_3692467206466374031_n
448124957_1013643660108752_8221882855517489871_n

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *