பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் சடலமாக மீட்பு - News View

About Us

About Us

Breaking

Monday, July 28, 2025

பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் சடலமாக மீட்பு

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பிக நிலந்த, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

பேராதெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யஹலதென்ன பகுதியில் உள்ள அவர்களது வீட்டில் இவ்வாறு அவர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சம்பிக நிலந்த (52) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையிலும், அவரது மனைவி (44) மற்றும் மகள் (17) ஆகியோர் மரணித்த நிலையில் வீட்டின் அறையொன்றினுள் சடலங்களாக மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு வேளை முதல் இன்று அதிகாலை வேளை வரையான காலப்பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment