நாடு திரும்பும்போது சட்டவிரோதமாக தங்கம் கொண்டுவர முயற்சி : மௌலவிக்கும் பெண்ணொருவருக்கும் விளக்கமறியல் - News View

About Us

About Us

Breaking

Friday, June 28, 2024

நாடு திரும்பும்போது சட்டவிரோதமாக தங்கம் கொண்டுவர முயற்சி : மௌலவிக்கும் பெண்ணொருவருக்கும் விளக்கமறியல்

ஹஜ் கட­மையை நிறை­வேற்ற மக்கா சென்­ற­தாக கூறப்­படும் மெளலவி ஒரு­வரும், அவ­ரது குழுவில் சென்ற பெண் ஒரு­வரும் மீள நாடு திரும்பும்போது பெரும் தொகை தங்க நகை­களை சட்ட விரோதமாக நாட்­டுக்குள் கொண்­டு­வர முயன்­றார்கள் எனும் குற்றச்சாட்டில் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

கல்­முனை பகு­தியை சேர்ந்த 44 வய­தான மெள­லவி ஒரு­வரும், 49 வயதான பெண் ஒரு­வ­ருமே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­தாக கட்டுநா­யக்க விமான நிலைய பொலிஸார் தெரி­வித்­தனர். 

அதன்­படி சுமார் ஒரு கோடியே 90 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான தங்க ஆப­ர­ணங்கள் பொலிஸாரால் சந்­தேகநபர்­களின் உடை­மை­களில் இருந்து கைப்­பற்­றப்­பட்­ட­தா­கவும், சந்­தேகநபர்கள் இரு­வரும் நீதிமன்றில் ஆஜர் செய்­யப்­பட்ட பின்னர் எதிர்­வரும் ஜூலை முதலாம் திக­தி­ வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சம்­பவம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­லகம் தெரி­வித்­தது.

சம்­பவம் தொடர்பில் அறிய முடி­வ­தா­வது, கடந்த 21 ஆம் திகதி பிற்பகல் 2.50 மணி­ய­ளவில் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை சவூதி அரே­பி­யா­வி­லி­ருந்து வந்த எடிஹாட் விமான சேவைக்கு சொந்­த­மான ஈ.வை. 300 எனும் விமானம் வந்­த­டைந்­துள்­ளது. 

இந்த விமா­னத்­தி­லேயே குறித்த மெள­ல­வியும், பெண்ணும் வந்துள்ளனர். அவர்கள் விமான நிலைய சுங்க பரி­சோ­த­னைகள் எல்லா­வற்­றையும் முடித்­துக்­கொண்டு விமான நிலை­யத்­தி­லி­ருந்து வெளி­யேற முற்­பட்­ட­போது, விமான நிலைய பொலிஸ் குழுவொன்றினால் அவர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்­ப­டையில், விமான நிலைய வெளி­யேறல் பிரிவில் வைத்து அவர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இதன்­போது அவர்­களின் பயண பொதி­­களை பொலிஸார் சோதனை செய்­துள்ளபோது சூட்­சு­ம­மாக மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­தாக கூறப்­ப‌டும் 850 கிராம் நிறை உடைய 24 மற்றும் 22 கரட் தங்க சங்கிலிகள், வளையல்கள், காத­ணிகள் உள்­ளிட்ட ஆப­ர­ணங்­களை பொலிஸார் கைப்­பற்­றி­யுள்­ளனர்.

இத­னை­ய­டுத்து சம்­பவம் தொடர்பில் மேல­திக விசா­ர­ணை­களை, நீர்கொ­ழும்பு பொலிஸ் அத்­தி­யட்சர் எரிக் பெரே­ராவின் ஆலோசனைக்கு அமைய, உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் பாலித்த அமர­துங்­கவின் நெறிப்­ப­டுத்­தலில், விமான நிலைய பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரிசோதகர்பியல் ஜீவ­ரத்ன சில்வா தலை­மை­யி­லான குழு­வினர் ஆரம்­பித்­துள்­ளனர்.

இத­னை­ய­டுத்து, இது குறித்து நீதி­மன்­றுக்கு பீ அறிக்கை ஊடாக விடயங்­களை முன் வைத்­துள்ள பொலிஸார் சந்­தேக நபர்­க­ளையும் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடரும் நிலையில் எதிர்வரும் முதலாம் திகதிவரை சந்தேக நபர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Vidivelli

No comments:

Post a Comment