யாழில் மிக்ஸருக்குள் பொரித்த பல்லி - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 25, 2024

யாழில் மிக்ஸருக்குள் பொரித்த பல்லி

யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸருக்கு பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது.

சந்நிதி ஆலயத்தில் நேற்று (24) இரவு ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

அதன்போது ஆலயத்திற்கு பெருமளவான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

அந்நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த ஒருவர், ஆலய சூழலில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் மிக்ஸரை வாங்கியபோது, அதனுள் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது.

அது தொடர்பில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பல்லியுடன் காணப்பட்ட மிக்ஸரை சான்று பொருளாக பெற்றுக் கொண்ட பொது சுகாதார பரிசோதகர் குறித்த இனிப்பு கடைக்கு எதிராக பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த வழக்கு எதிர்வரும் 27ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

யாழ்.விசேட நிருபர்

No comments:

Post a Comment