எரிபொருட்களின் விலைகள் குறைப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, June 30, 2024

எரிபொருட்களின் விலைகள் குறைப்பு

இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த திருத்தங்களின் கீழ், மூன்று வகையான எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள அதேவேளை, இரண்டின் விலையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவில்லை.

இதன்படி, 92 ரக பெட்ரோலின் விலை 11 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 344 ரூபாவாக அமைந்துள்ளது.

95 ரக பெட்ரோலின் விலை 41 ரூபாவால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 379 ரூபாவாகியுள்ளது.

சுப்பர் டீசலின் விலை 22 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை 355 ரூபாவாகும்.

எனினும், ஒட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் மாற்றமில்லை என இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 317 ரூபாவாகவும், மண்ணெண்ணெய்யின் விலை 202 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment