முற்றிலுமாக அகற்றப்படும் நியூயோர்க் கிரிக்கெட் மைதானம் : 8 போட்டிகளுக்காக செலவிடப்பட்ட 200 கோடி ரூபாய் - News View

About Us

About Us

Breaking

Thursday, June 13, 2024

முற்றிலுமாக அகற்றப்படும் நியூயோர்க் கிரிக்கெட் மைதானம் : 8 போட்டிகளுக்காக செலவிடப்பட்ட 200 கோடி ரூபாய்

அமெரிக்க மற்றும் வெஸ்ட் இண்டீசில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. 

இதில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறும் போட்டிகள் புறநகரில் உள்ள Nassau County International Cricket Stadium என்ற இடத்தில் உள்ள மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்த அறிவிப்பு வெளியானபோது இங்கு தரமான மைதான கட்டமைப்பே இல்லாத நிலை இருந்தது. இதனால் போட்டி எப்படி நடைபெறும் என்ற கேள்வி எழுந்தது. அதனைத் தொடர்ந்து இரண்டே மாதங்களில் 34,000 இரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் பிரமாண்டமான மைதானம் அமைக்கப்பட்டது.

இந்த மைதானத்தில் கோல்ஃப் மற்றும் கால்பந்து மைதானத்தில் பயன்படுத்தப்படும் பெர்முடா வகை புற்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும், ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் பயன்படுத்தப்படும் ஆடுகளம் இங்கு கொண்டுவரப்பட்டு தயார்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மைதானத்தில் 8 போட்டிகள் நடைபெற்ற நிலையில், நேற்று (12) இந்த மைதானத்தில் நடைபெற்ற கடைசி போட்டியான இந்தியா – அமெரிக்கா அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இந்த மைதானம் முற்றிலுமாக அகற்றப்பட உள்ளது.

இந்த மைதானத்தின் கட்டமைப்புக்காக சுமார் 200 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்ட நிலையில், தொடர்ந்து அந்த மைதானத்தில் நிறைந்த கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

அதேநேரம் இந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளால் அமெரிக்காவில் கிரிக்கெட் போட்டிகள் பிரபலமடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment