மட்டக்களப்புக்கு பல நன்மைகளுடன் ஜயகமு ஸ்ரீலங்கா - News View

About Us

About Us

Breaking

Thursday, June 27, 2024

மட்டக்களப்புக்கு பல நன்மைகளுடன் ஜயகமு ஸ்ரீலங்கா

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் நாடளாவிய மக்கள் நடமாடும் சேவையின் மட்டக்களப்பு மாவட்ட நிகழ்வு இம்மாதம் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் முதல் நாளில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களை கௌரவவிக்கும் "ஹரசர திட்டம்" நடைபெற உள்ளது.

மேலும், புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள், பாடசாலை உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகள் விநியோகம் செய்யப்படும்.

அத்தோடு, பிரதேச செயலாளர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு ஸ்மார்ட் போர்டுகள் வழங்கி வைக்கப்படும் .

இரண்டாம் நாள் நிகழ்வில், சுயதொழில் ஆரம்பிப்பதற்கான நிதியுதவி, சக்கர நாற்காலி, மூக்கு கண்ணாடி வழங்குதல், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் அதிகத்தடவை பதிவு செய்து வேலைக்காக வெளிநாடு சென்ற புலம்பெயர் தொழிலாளிகளின் குடும்பங்களுக்கு சதொச வவுச்சர்கள் வழங்கல் போன்றவை நடைபெற உள்ளது
வேலை தேடும் இளைஞர்களுக்கு தொழில் பயிற்சிக்கான வழிகாட்டுதல்களை வழங்கும் "ஸ்மார்ட் யூத் கிளப்" நிகழ்வும் இங்கு நடைபெற உள்ளது. இத்திட்டத்தின் ஊடாக தொழில் பயிற்சிக்கான நிதியை ஜனாதிபதி நிதியம் வழங்கின்றமை குறித்தும் தெளிவூட்டப்படும்.

முறைசாரா தொழிலாளர்களின் தொழில் கௌரவத்தையும், பாதுகாப்பை உறுதிப்படுத்தும் ``கரு சரு'' திட்டமும், ஆட் கடத்தல் மற்றும் தொழிலாளர் சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு இந்நடமாடும் சேவையினால் மேலும் பின்வரும் விடயங்கள் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்பட்ட உள்ளன.

குறிப்பாக உள்நாட்டு, வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் வெளிநாட்டு தொழிலாளர்களின் முறைப்பாடுகளைப் பெறுதல், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்கான பதிவுகள் மேற்கொள்ளல், தொழில் வங்கியில் பதிவு செய்தல், வெளிநாடு செல்வதற்கு கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு இழப்பீடு/சம்பளம்/காப்புறுதி தொடர்பான சேவைகள் சிரம வசன நித்தியத்தினால் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்குதல், EPF/ETF தொடர்பான சேவைகள் தொழிற்பயிற்சி கற்கைகளுக்கான பதிவு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவு, மீண்டும் வெளிநாட்டு செல்ல முடியாதுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளிகளுக்கு சுய தொழிலுக்கான நிதி உதவித் திட்டம் போன்ற பல சேவைகள்.

எனவே இதனால் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வெகுவாகப் பயனடையாவர்கள். தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் அனைத்து நிறுவனங்களும் இத்திட்டத்தில் கலந்து சிறப்பிக்க உள்ளன.

குறிப்பாக இலங்கை வேலை வாய்ப்புப் பணியகத்தில் அங்கீகரிக்கப்பட்ட 40 வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிறுவனங்களின் சேவையை இலவசமாகவும் பெற்றுக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment