இலங்கை வருகிறார் ஈரான் ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Thursday, April 18, 2024

இலங்கை வருகிறார் ஈரான் ஜனாதிபதி

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம்  ரைஸி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.

‘உமா ஓயா’ பல்­நோக்கு அபி­வி­ருத்தித் திட்­டத்தை மக்கள் பாவனைக்கு கைய­ளிக்கும் வைப­வத்தில் கலந்­து­கொள்­வ­தற்­காக உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு ஈரான் ஜனா­தி­பதி இப்­ராஹிம் ரைஸி எதிர்­வரும் 24ஆம் திகதி இலங்கை வர­வுள்ளார்.

குறிப்­பிட்ட திட்டம் ஈரான் அபி­வி­ருத்தி வங்­கியின் கடன் உத­வியின் கீழ் கடந்த 2010ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­டது. இத்­திட்­டத்தின் கீழ் தேசிய மின் கட்­ட­மைப்­புக்கு 120 மெகா வோட் மின்­சாரம் உள்வாங்கப்ப­ட­வுள்­ளது.

மின்­சார உற்­பத்­திக்கு மேல­தி­க­மாக இத்­திட்­டத்தின் கீழ் குடிநீர் மற்றும் விவ­சாயத்துக்கு தேவை­யான நீர் விநி­யோ­கமும் திட்டமிடப்பட்­டுள்­ளது.

529 மில்­லியன் அமெ­ரிக்க டொலர் செலவில் இத்­திட்­டத்தின் நிர்­மாண வேலைகள் கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்­கப்­பட்­டது. 

இத்­திட்­டத்தின் நிர்­மாண வேலைகள் கடந்த 2015ஆம் ஆண்டு இறுதியில் பூர்த்தி செய்­யப்­ப­டு­வ­தற்குத் திட்­ட­மிட்­டி­ருந்த போதும் பல்வேறு தடைகள் கார­ண­மாக கால­தா­மதம் ஏற்­பட்­டமை குறிப்பிடத்­தக்­கது.

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம்  ரைஸி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.

இஸ்ரேல் மீது ஈரான் கடந்த சனிக்கிழைமை (13) வான் வழித்தாக்குதலை நடத்திய நிலையில், பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றநிலைக்கு மத்தியில் ஈரான் ஜனாதிபதியின் விஜயம் அமையவிருக்கின்றது.

இஸ்­ரேலின் அமைச்­ச­ரவை கூட்­டத்தில் ஈரா­னுக்குள் தாக்­குதல் நடத்த தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள நிலையில் ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் இடம்பெறவுள்ளமை சர்வதேச அளவில் கவனயீர்ப்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Vidivelli

No comments:

Post a Comment