இலங்கை அரசாங்கம் வழங்கிய நன்கொடை பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. பணியக வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Friday, April 12, 2024

இலங்கை அரசாங்கம் வழங்கிய நன்கொடை பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. பணியக வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது

பலஸ்­தீனின் காஸா பகு­தியில் இடம்­பெறும் மோதல்­க­ளினால் பாதிக்கப்­பட்ட சிறு­வர்­க­ளுக்­காக இலங்கை அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­பட்ட நன்­கொடை நிதி பலஸ்­தீ­னிய அக­தி­க­ளுக்­கான ஐக்கிய நாடு­களின் நிவா­ரண மற்றும் பணி­ய­கத்தின் (UNRWA) வங்கிக் கணக்­கிற்கு மாற்­றப்­பட்­டுள்­ள­தாக இலங்­கைக்­கான ஐக்­கிய நாடுகளின் வதி­விடப் பிர­தி­நிதி மார்க்-­ஆண்ட்ரே ஃப்ரான்ச் தெரிவித்தார்.

“இலங்கை அர­சாங்­கத்­தினால் கடந்த வாரம் வழங்­கப்­பட்ட ஒரு மில்லியன் அமெ­ரிக்க டொலர் நன்­கொடை கிடைக்கப் பெற்றமைக்கான பற்­று­சீட்­டினை வெளி­வி­வ­கார அமைச்­சிற்கு UNRWA உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அனுப்­பி­யுள்­ளது” எனவும் அவர் குறிப்­பிட்டார்.

“இந்­நிதி காஸா மக்­களின் மனி­தா­பி­மானத் தேவை­க­ளுக்­காக பயன்ப­டுத்­தப்­படும்” என ஐக்­கிய நாடு­களின் இலங்­கைக்­கான வதிவிட பிர­தி­நிதி தெரி­வித்தார்

காஸா மக்­களின் முக்­கி­ய­மான தேவையின் தரு­ணத்தில் மேற்கொள்ளப்­பட்ட மனி­தா­பி­மான வேண்­டு­கோளை ஏற்று இலங்கை அர­சாங்கம் வழங்­கிய பங்­க­ளிப்­பிற்கு UNRWA மிகுந்த நன்­றி­யுடன் இருப்­ப­தா­கவும் அவர் கூறினார்.

1949ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட பலஸ்­தீ­னிய அக­தி­க­ளுக்­கான ஐக்கிய நாடு­களின் நிவா­ரண மற்றும் பணி நிறு­வ­னத்­தினால் அந்நாட்டில் பல்­வேறு மனி­தா­பி­மான செயற்­திட்­டங்கள் தொடர்ச்சியாக முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றமை குறிப்பிடத்தக்கது.

இவ்­வா­றான நிலையில், காஸாவில் இடம்­பெ­று­கின்ற மோதல்களினால் பாதிக்­கப்­பட்ட சிறு­வர்­க­ளுக்கு நிவா­ரணம் வழங்கும் நோக்கில் ஜனா­தி­பதி ரணில் விக்­ர­ம­சிங்­கவின் யோசனையின் பேரில் காஸா சிறுவர் நிதி­யத்­தினை இலங்கை அரசாங்கம் ஆரம்­பித்­துள்­ளது.

இவ்­வ­ருடம் இப்தார் நிகழ்­வு­களை நடாத்­து­வ­தற்­காக அமைச்­சுக்கள் மற்றும் அரச நிறு­வ­னங்­க­ளினால் ஒதுக்­கப்­ப­டு­கின்ற நிதியை இந்த நிதி­யத்­துக்கு வழங்­கு­மாறு ஜனா­தி­பதி வேண்­டுகோள் விடுத்திருந்தார்.

இதற்­கி­ணங்க, முதற்­கட்­ட­மாக காஸா சிறுவர் நிதி­யத்­திற்­காக வழங்கப்­பட்ட ஒரு மில்­லியன் அமெ­ரிக்க டொல­ரினை UNRWA­விற்கு இலங்கை அர­சாங்­கத்­தினால் அண்­மையில் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, காஸா மக்­க­ளுக்கு தமது நன்­கொ­டை­களை வழங்க விரும்­புவோர் இலங்கை வங்­கியின் தப்­ரபேன் கிளையின் 7040016 எனும் கணக்கு இலக்­கத்­திற்கு எதிர்­வரும் ஏப்ரல் 30ஆம் திக­திக்கு முன்னர் வைப்புச் செய்­யு­மாறு ஜனா­தி­பதி செய­லகம் அறிவித்துள்ளது.

இந்­நி­தி­யத்­திற்கு இலங்கை மக்கள் தொடர்ச்­சி­யாக பங்களிப்புக்களை செலுத்தி வரு­கின்­றனர். இவ்­வா­றான நிலையில் இந்த நிதி காஸா மக்­க­ளுக்கு அனுப்­பப்­ப­டு­வது தொடர்பில் தற்­போது பல்­வேறு வகை­யான போலிச் செய்­திகள் சமூக ஊட­கங்­களில் தொடர்ச்­சி­யாக பரப்­பட்டு வரு­கின்­றன.

இவ்­வா­றான நிலையில், குறித்த நிதி காஸா மக்களுக்கு சென்றடைவது தொடர்பில் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிட பிரதிநிதியினை தொடர்புகொண்ட வினவிய போதே இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நன்கொடை நிதி UNRWAவின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ள விடயத்தினை அவர் உறுதிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Vidivelli

No comments:

Post a Comment