ஒரு உளுந்து வடை மற்றும் தேநீருக்கு 800 ரூபா அறவீடு : காணொளியாக வெளியிட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணி - News View

About Us

About Us

Breaking

Friday, April 19, 2024

ஒரு உளுந்து வடை மற்றும் தேநீருக்கு 800 ரூபா அறவீடு : காணொளியாக வெளியிட்ட வெளிநாட்டு சுற்றுலா பயணி

வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேநீருக்கு 800 ரூபா பணம் அறவிட்ட குற்றச்சாட்டில் சந்தேகநபர் களுத்துறை சுற்றுலா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், ஹோட்டல் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அண்மையில், களுத்துறை நகர் பகுதியில் பெல்ஜியம் நாட்டு சுற்றுலா பயணி ஒருவரிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேநீருக்காக 800 ரூபா பணம் அறவிடப்பட்டுள்ளது. இதனை குறித்த சுற்றுலாப் பயணி தனது கெமராவில் பதிவு செய்த நிலையில், குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியதைத் தொடர்ந்து சந்தேகநபர் களுத்துறை சுற்றுலா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு – புதுக்கடை பகுதியில் உணவு கொள்வனவு செய்ய வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment