ஆர்.ராம்
எதிர்வரும் 29ஆம் திகதி தேர்தல்கள் திணைக்களத்தின் முடிவின் பின்னர் நீதிமன்றத்துக்குச் செல்வது குறித்து நாம் தீர்மானிப்போம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் பேராசிரியர் ரோஹண பியதாச தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சரதீ துஷ்மந்த மித்திரபால தேர்தல்கள் ஆணைக்குழுவில் எமது தரப்பின் நிருவாக அங்கத்தவர்கள் உள்ளிட்ட பதவி நிலைகளை அறிவித்துள்ளார்.
அதேநேரம், சந்திரிகா தலைமையில் சட்ட விரோதமாக கூடிய தரப்பினரும் தமது சட்ட விரோதமான தெரிவுகளை தேர்தல்கள் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் தேர்தல்கள் திணைக்களம் எதிர்வரும் 29ஆம் திகதி உரியவாறான பதிலளிப்புக்களை வழங்கவுள்ளது. அதனடிப்படையில்தான் நாம் அடுத்தகட்டம் தொடர்பில் தீர்மானிக்கவுள்ளோம்.
தேர்தல்கள் திணைக்களத்தால் தீர்வினை வழங்க முடியாதுவிட்டாலோ அல்லது நீதிமன்றத்துக்கு பரிந்துரைத்தாலோ அதனைப் பின்பற்றுவதாகவே தற்போதைய தீர்மானமாக உள்ளது என்றார்.
No comments:
Post a Comment