நீதிமன்றம் செல்வது அவர்களின் சுதந்திரம், அதற்கு நாம் தடைகளை விதிக்க முடியாது - துமிந்த திஸாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Sunday, April 21, 2024

நீதிமன்றம் செல்வது அவர்களின் சுதந்திரம், அதற்கு நாம் தடைகளை விதிக்க முடியாது - துமிந்த திஸாநாயக்க

ஆர்.ராம்

நீதிமன்றம் செல்வது அவர்களின் (மைத்திரி தரப்பின்) சுதந்திரம் என்றும், அதற்கு நாம் தடைகளை விதிக்க முடியாது என்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், அநுராதபுர பராளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

அரசியல் குழுத் தெரிவுகள் யாப்பினை மீறும் வகையில் அமைந்திருப்பது தொடர்பில் நீதிமன்றத்துக்கு முன்னாள் தவிசாளர் மைத்திரிபால சிறிசேனவின் தரப்பினர் செல்வதற்கு முஸ்தீப்பது தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாம் கட்சியின் யாப்பு விதிகளுக்கு அமைவாகவே புதிய தெரிவுகளை மேற்கொண்டுள்ளோம். அதற்கு எதிராக நீதிமன்றத்தினை நாடுவதாக அவர்கள் (மைத்திரி தரப்பினர்) செல்வதாக இருந்தால் அதற்கு நாம் தடைகளை ஏற்படுத்த முடியாது. நீதிமன்றம் செல்வது அவர்களின் சுதந்திரம்.

எம்மைப் பொறுத்த வரையில் கட்சியின் ஆதரவாளர்கள் இன்னமும் கட்சியுடனேயே உள்ளனர். அவர்கள் கட்சித் தலைமையின் செயற்பாடுகளின் காரணமாக அதிருப்தி அடைந்திருந்தனர். ஆகவே அவ்விதமானவர்களை மீண்டும் கட்சியுடன் இணைந்து மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கே விரும்புகின்றார்கள்.

அந்த வகையில் அதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுத்துள்ளோம். அடுத்து வரும் காலத்தில் கட்சியை மீளக் கட்டியமைத்து முன்னெடுக்கும் செயற்பாட்டில் பங்கெடுக்கவுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment