வாக்குமூலம் வழங்குமாறு மைத்திரிக்கு CID அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, March 24, 2024

வாக்குமூலம் வழங்குமாறு மைத்திரிக்கு CID அழைப்பு

உயிர்த் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பெறவுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நேற்றுமுன்தினம் 22ஆம் திகதி வௌியிட்ட கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அழைப்பு விடுத்துள்ளது.

இதன்படி நாளை (25) குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் இது தொடர்பான வாக்குமூலத்தை பெற்றுக் கொள்ளவுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் மைத்திரிபால சிறிசேன இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவாரென பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் தாம் தெரிவித்த கருத்து குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment