பால் தேநீரின் விலையும் குறைப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, March 25, 2024

பால் தேநீரின் விலையும் குறைப்பு

பால் தேநீரின் விலையை 10 ரூபாவினால் குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கமும் நடவடிக்கை எடுத்துள்ளது.

நேற்று நள்ளிரவு (25) முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலைகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்ததன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், ஒரு கிலோ கிராம் பால்மா பொதியின் விலை 150 ரூபாவினாலும், 400 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட பால்மா பொதி ஒன்றின் விலை 60 ரூபாவினாலும் குறைக்க தீர்மானிக்கப்பட்டது. 

பால்மா விலைக்குறைப்பின் பலனை நுகர்வோருக்கு வழங்கும் பொருட்டு ஒரு கோப்பை பால் தேநீரின் விலையும் 5-10 குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment