தமிழில் பொலிஸ் முறைப்பாட்டுக்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம் - News View

About Us

About Us

Breaking

Saturday, March 16, 2024

தமிழில் பொலிஸ் முறைப்பாட்டுக்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்

தமிழ் மொழி மூல முறைப்பாட்டுக்கு அவசர தொலைபேசி இலக்கமான 107 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களை மையமாகக் கொண்டு, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் 107 என்ற அவசர தொலைபேசி இலக்கம் தமிழ் மொழி மூல முறைப்பாட்டுக்காக நாடு பூராகவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (16) வவுனியாவில் இடம்பெற்றது.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக ஆகியோரின் பங்குபற்றுதலுடன் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.

வவுனியா பிரதிப் பொலிஸ்மா அதிபர் சமந்த விஜயசேகர தலைமையில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியாலய வாளாகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட அரச அதிபர் க. கனகேஸ்வரன், வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் தி. திரேஸ்குமார், வட மாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் மஹிந்த குணரட்ண உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப்படை அதிகாரிகள், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், மதத்தலைவர்கள், கிராம அலுவர்கள், சமுதாய பொலிஸ் குழு உறுப்பினர்கள், வர்த்தகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

வவுனியா விசேட நிருபர்

No comments:

Post a Comment