24 மணி நேரமும் 365 நாட்களும் நாட்டில் விலை அதிகரிப்பு கலாசாரமே - எதிர்க்கட்சித் தலைவர் - News View

About Us

About Us

Breaking

Sunday, March 3, 2024

24 மணி நேரமும் 365 நாட்களும் நாட்டில் விலை அதிகரிப்பு கலாசாரமே - எதிர்க்கட்சித் தலைவர்

பால் தேநீர், தேநீர், தின்பண்டங்கள், சிற்றூண்டிகள், சாப்பாடுப் பொதிகள், கொத்து போன்றவற்றின் விலைகள் அதிகரித்துள்ளன. 24 மணி நேரமும் 365 நாட்களும் நாட்டில் விலை அதிகரிப்பு கலாசாரமே இருந்து வருகிறது. விலைவாசி உயர்ந்து, மக்களின் வாழ்க்கை சீரழிந்தாலும், அரசிடம் இதற்கான பதில் இல்லை. இவ்வாறான நிலையில் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பணத்தை பெற்றுக்கொண்டு வெளிநாடு முழுவதும் விஜயங்களை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 117 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமஹாராம, ஓயாஹவ, ராவணவெவ கனிஷ்ட கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்று (03) கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

ரணசிங்க பிரேமதாசவின் 200 ஆடைத் தொழிற்சாலைகள் வேலைத்திட்டத்தின் பின்னர், நாட்டுக்கு டொலர்களைப் பெற்றுக்கொள்ளும் உள்நாட்டு சர்வதேச அளவிலும் இன்னும் எந்தத் திட்டமும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இவ்வாறு போகும் போக்கில் சர்வதேச நாணய நிதியத்துடன் 100 உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டாலும் டொலர்களைப் பெற்றுக் கொள்ள முடியாது போகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எமது நாட்டால் மின் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை. அரசாங்கம் எவ்வளவு தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், அரசாங்கம் எப்போதும் மக்கள் மீது சுமைகளை ஏற்றி ஆட்சியாளர்கள் மனிதாபிமானமற்ற வாழ்க்கையை முன்னெடுத்து வருகின்றனர்.​​ ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அதிநவீன மூலோபாய திட்டத்தின் மூலம் டொலர்களை கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்தப்படும்.

வங்குரோத்து என்ற இந்த மரண வலையில் இருந்து வெளியேற பொருளாதார அபிவிருத்தி ஏற்பட வேண்டும். அதற்காக உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நேரத்தில் அரசாங்கம் பொருளாதாரத்தை சுருக்கி வருகிறது. மின்கட்டண அதிகரிப்பால் புதிய முதலீட்டாளர்கள் நாட்டிற்கு வரமாட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

அத்தோடு நடன மற்றும் அரங்கேற்றங்கள் குழுவுக்குத் தேவையான அணிகலன்களைப் பெற்றுக் கொள்ள ஒரு இலட்சம் ரூபா நன்கொடையும் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

No comments:

Post a Comment