இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறீதரன் தெரிவு - News View

About Us

About Us

Breaking

Sunday, January 21, 2024

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக சிவஞானம் சிறீதரன் தெரிவு

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவு செய்யப்பட்டார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு திருகோணமலை நகர மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றது.

இதன்படி, இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்கள் 321 பேர் வாக்களித்தனர்.

தலைவர் பதவிக்காக போட்டியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு 184 வாக்குகளும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கு 137 வாக்குகளும் அளிக்கப்பட்டது.

புதிய தலைவர் எதிர்வரும் 28ஆம் திகதி இடம்பெறும் கட்சியின் தேசிய மாநாட்டின்போது உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்பார்.

பிரபாகரன் டிலக்‌ஷன் – யாழ்ப்பாணம்

No comments:

Post a Comment