பணி இடைநீக்கம் செய்யப்பட்ட மேலும் 51 மின்சார ஊழியர்கள் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 20, 2024

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட மேலும் 51 மின்சார ஊழியர்கள்

மின்சார சபையை மறுசீரமைக்கும் சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மின்சார சபையின் மேலும் 51 ஊழியர்களின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, மின்சார சபையை மறுசீரமைக்கும் சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மின்சார சபையின் 15 ஊழியர்களின் சேவை ஏற்கனவே இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், சேவை இடைநிறுத்தப்பட்டுள்ள மின்சார சபையின் ஊழியர்களின் எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது.

உத்தேச மின்சார சபை சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார சபையின் ஊழியர்கள் கடந்த 03 ஆம் திகதி முதல் மூன்று நாட்கள் பகல் உணவு வேளையின்போது கொழும்பில் உள்ள மின்சார சபையின் தலைமை காரியாலயத்துக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்சார சபையின் சேவையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் கடந்த 2 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார சபையின் பதில் பொது முகாமையாளர் மின்சார சபை சேவையாளர்களின் சகல விடுமுறைகளையும் இரத்து செய்யும் வகையில் விசேட சுற்றறிக்கையை வெளியிட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில் இந்த சுற்றறிக்கையை பொருட்படுத்தாமல் மின்சார சேவையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நிறுவன மட்டத்தில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு எதிராகவும் பொதுமக்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் வகையிலும் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக நிறுவன மட்டத்தில் நடவடிக்கை எடுக்குமாறு மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

இவ்வாறு சேவையில் இருந்து இடை நிறுத்தப்பட்ட ஊழியர்கள் மின்சார சபையின் நிதி கருமபீடத்தை மூடி விட்டு போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்கள். இதனால் கட்டணம் செலுத்த வந்த வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

நிறுவன மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து 66 ஊழியர்களின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மின்சாரபை மேலும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment