கடந்த வருடத்தில் சுமார் இரண்டரை பில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருளை கைப்பற்றியதுடன், 81 சந்தேகநபர்களை கைது செய்ததாக, சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில வருடங்களில் சுங்கத் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போதைப் பொருள் கைப்பற்றியமையை நோக்கும்போது, கடந்த வருடத்திலேயே அதிக தொகை கொண்ட போதைப் பொருளை கைப்பற்றியதாகவும், அத்திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
ஹெரோயின், ஹஸிஸ், கொக்கெய்ன் மற்றும் போதை மாத்திரைகள் ஆகியவற்றையே கைப்பற்றியதாகவும், அத்திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து கொழும்பு, நுகேகொடை, அநுராதபுரம், கண்டி, பாணந்துறை ஆகிய இடங்களில் வசிக்கும் நபர்கள் சிலருக்கு இப்போதைப் பொருள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.
இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டிருந்த முகவரிகளை விசாரித்தபோது, அவை போலி முகவரிகளென தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், அவை மேலதிக விசாரணைக்காக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரிடம் கையளிக்கப்பட்டதாகவும், சுங்கத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment