பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 1,182 சந்தேகநபர்கள் கைது - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 3, 2024

பொலிஸாரின் சுற்றிவளைப்பில் 1,182 சந்தேகநபர்கள் கைது

நாடளாவிய ரீதியில் நேற்று (02) முதல் இன்று (03) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 1,182 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

44 சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், 3 சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், போதைக்கு அடிமையான 47 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப் படையில் பதிவு செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பட்டியலில் இருந்த 138 சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட நடவடிக்கையின் போது பின்வரும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஹெரோயின்: 287 கிராம்
ஐஷ்: 246 கிராம்
கஞ்சா: 5 கிலோ 400 கிராம்
கஞ்சா செடிகள்: 19,052
மாவா: 104 கிராம்
ஏஷ்: 95 கிராம்
போதை மாத்திரைகள்: 119

No comments:

Post a Comment