வெளியாகிறது அயலான் ட்ரெய்லர் : போஸ்டரை பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 3, 2024

வெளியாகிறது அயலான் ட்ரெய்லர் : போஸ்டரை பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான்

அயலான் திரைப்படத்தின் ட்ரெய்லர் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

அதில், அயலான் திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை மறுதினம் (05) டுபாயில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அயலான்’ திரைப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்து வெளியான படங்களிலேயே அதிகப்படியான நாடுகள் மற்றும் திரைகளில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘அயலான்’ தான் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. 

‘அயலான்’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக எதிர்வரும் 12ஆம் திகதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அதன்படி, ‘அயலான்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை மறுதினம் வெளியாகவுள்ளது. 

இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை தாஜ் கோரமண்டல் ஓட்டலில் பிரம்மாண்டமாக நடந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment