டிஜிட்டல் முறையில் அனுப்புமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ள CEB - News View

About Us

About Us

Breaking

Thursday, November 9, 2023

டிஜிட்டல் முறையில் அனுப்புமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ள CEB

நாட்டில் சீரற்ற காலநிலையால் ஏற்படும் மின் தடைகள் தொடர்பான முறைப்பாடுகளை CEB Care app அல்லது 1987 அவசர அழைப்பு நிலையத்தின் சுய சேவை மற்றும் IVR அமைப்பு போன்ற டிஜிட்டல் வழிமுறைகளைப் பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டுமென, இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக மின் தடைகள் தொடர்பில் அழைப்பு நிலையங்களுக்கு கிடைக்கப் பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சபையின் பேச்சாளர் நோயல் பிரியந்த தெரிவித்துள்ளார். 

எனவே, டிஜிட்டல் முறைகளைப் பயன்படுத்தி முறைப்பாடுகளை அனுப்புமாறு நுகர்வோரை இலங்கை மின்சார சபை கோரியுள்ளது. 

இலங்கை மின்சார சபை தற்போதுள்ள நிலைமைகளை கருத்திற்கொண்டு, மின்தடைகளை விரைவில் மீளமைக்க 24 மணி நேரமும் செயற்படுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment