ஒன்பது வருடங்களின் பின்னர் வழங்கப்பட்ட தீர்ப்பு : கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட முதலாவது மரண தண்டனை - News View

About Us

About Us

Breaking

Thursday, November 9, 2023

ஒன்பது வருடங்களின் பின்னர் வழங்கப்பட்ட தீர்ப்பு : கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட முதலாவது மரண தண்டனை

கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் பெண் ஒருவரை கொலை செய்த குற்றவாளிக்கு ஒன்பது வருடங்கனின் பின்னர் நேற்று (09) கிளிநொச்சி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி மாத்தளை பகுதியைச் சேர்ந்த இராஜசுலோஜனா என்ற பெண்னை கத்தியால் குத்திக் படுகொலை செய்து கிணற்றுக்குள் தள்ளி விட்ட பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த கிளிநொச்சி பொலிஸார் மற்றும் CID யினர் சடலம் மீட்கப்பட்ட பகுதிக்கு அயலில் உள்ள சிவில் பாதுகாப்புத் திணைக்கள அலுவலகத்தில் வேலை செய்த மரணித்தவரின் காதலனான எதிரியினை கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் மரணித்தவர் இறுதியாக வைத்திருந்த கைத்தொலைபேசி மற்றும் உடைகள் என்பவற்றுடன் கைது செய்து ஆஜர்படுத்தியிருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு பின்னர் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்து வழக்கு தொடரப்பட்டு நேற்று குறித்த வழக்கானது கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.ஏ சகாப்தீன் முன்னிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எதிரிக்கு தீர்ப்பு வாசித்துக் காட்டப்பட்டதுடன் எதிரியின் இறுதிக் கருத்தையும் கேட்டதை தொடர்ந்து குறித்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்ப்பு வழங்கும்போது அனைவரும் எழுந்து நின்றதுடன், நீதிமன்றத்தின் அனைத்து மின் விளக்குகளும் அணைக்கப்பட்டு நீதிமன்ற செயற்பாடுகள் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட முதலாவது மரண தண்டனை தீர்ப்பு இதுவாகும்.

பரந்தன் நிருபர்

No comments:

Post a Comment