நாளை (12) தீபாவளி தினத்தையிட்டு, மதுவரித் திணைக்கள அனுமதிப்பத்திரம் பெற்ற, ஒரு சில பகுதிகளில் செயற்படும் மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு, கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
மதுவரி (கலால்) திணைக்கள ஆணையாளர் நாயகம் இவ்வுத்தரவை விடுத்துள்ளதாக, அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கலால் திணைக்கள பேச்சாளர், கலால் திணைக்கள சட்ட அமுலாக்க ஆணையாளர் கபில குமாரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய கலால் திணைக்கள அனுமதிப்பத்திரம் பெற்ற நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்கள், பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை மற்றும் ரிதிமாலியத்த பகுதிகளைத் தவிர ஏனைய பகுதிகளில் உள்ள மதுபான விற்பனை நிலையங்கள். இவ்வாறு மூடுவதற்கு ஆவணை செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment