இலங்கையில் அடுத்த வருடம் தேர்தல் இடம்பெறும் - நம்பிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்கா - News View

About Us

About Us

Breaking

Wednesday, November 8, 2023

இலங்கையில் அடுத்த வருடம் தேர்தல் இடம்பெறும் - நம்பிக்கை வெளியிட்டுள்ள அமெரிக்கா

இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

உரிய நேரத்தில் தேர்தல்கள் இடம்பெறுவது ஜனநாயகத்திற்கு மிக அவசியமான விடயம் என தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அரசமைப்பின்படி ஏனைய தேர்தல்களும் இடம்பெறும் என அமெரிக்கா நம்பிக்கை கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயங்கள் அனைத்தும் மக்களுக்கான குரல்களை வழங்கும் அவர்கள் வாக்களிப்பின் மூலம் தங்கள் கருத்துக்களை வெளியிட முடியும் தங்கள் தலைமையை தெரிவு செய்ய முடியும் என அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் நடைபெற வேண்டிய தேர்தல்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கின்றோம் சுதந்திரமான நியாயமான தேர்தல் இடம்பெறுவதை எதிர்பார்த்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment