பொதுப் போக்குவரத்துக்கான வாகன இறக்குமதிக்கு இனி அனுமதி இல்லை : ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய - News View

About Us

About Us

Breaking

Thursday, November 9, 2023

பொதுப் போக்குவரத்துக்கான வாகன இறக்குமதிக்கு இனி அனுமதி இல்லை : ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய

பொதுப் போக்குவரத்துக்கான வாகனங்களை இறக்குமதிக்கு வழங்கப்பட்டிருந்த ஒரு மாத கால அனுமதி நிறைவடைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.

அனுமதி வழங்கப்பட்ட மாதத்துக்குள் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க சந்தர்ப்பம் வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதன்படி பொது போக்குவரத்துக்கான எந்த வாகனத்தையும் இறக்குமதி செய்ய இனி அனுமதி இல்லை.

வாகனங்களின் தேவை, இடவசதி, எரிபொருள் செலவு, வாகன இறக்குமதிக்கான பரிவர்த்தனை தொகை போன்றவற்றில் விசேட கவனம் செலுத்தப்படுமென இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment