பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ள தபால் ஊழியர்கள்! - News View

About Us

About Us

Breaking

Tuesday, November 7, 2023

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ள தபால் ஊழியர்கள்!

தபால் ஊழியர்கள் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இன்று செவ்வாய்க்கிழமை (07) நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் என இலங்கை தபால் சேவை சங்கத்தின் தலைவர் ஜகத் மஹிந்த தெரிவித்தார்.

கண்டி மற்றும் நுவரெலியாவில் உள்ள தபால் அலுவலகங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

அரசாங்கம் பிரச்சினைக்கு தீர்வுகாணத் தவறினால் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தபால் ஊழியர்கள் தயாராக இருப்பதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment