ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சிற்குரிய 5 நிறுவனங்களின் வருடாந்த இலாபம் திறைசேரிக்கு கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, November 10, 2023

ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சிற்குரிய 5 நிறுவனங்களின் வருடாந்த இலாபம் திறைசேரிக்கு கையளிப்பு

ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சிற்குரிய 05 நிறுவனங்களின் வருடாந்த இலாபமாக, 925 மில்லியன் ரூபாவை திறைசேரிக்கு வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

அதன்படி, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையிடம் இருந்து 350 மில்லியன் ரூபா, லங்கா போஸ்பேட் நிறுவனம் 300 மில்லியன் ரூபா, பி.சி.சி. நிறுவனம் 100 மில்லியன் ரூபா, தேசிய உப்பு நிறுவனம் 100 மில்லியன் ரூபா, இலங்கை சீமெந்துக் கூட்டுத்தாபனம் 75 மில்லியன் ரூபா ஆக, வருடாந்த இலாபத் தொகையாக 925 மில்லியன் ரூபா திறைசேரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment