கிழக்கு மாகாணத்தில் 499 அதிபர்கள் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Monday, November 6, 2023

கிழக்கு மாகாணத்தில் 499 அதிபர்கள் நியமனம்

நூருல் ஹுதா உமர்

கிழக்கு மாகாணத்தில் அதிபர் தரம் 3 நிறைவு செய்த 499 பேருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நியமனங்கள் வழங்கும் நிகழ்வு திருகோணமலை இந்துக் கலாச்சார மண்டபத்தில் இன்று (06) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான கபில அத்துகோரல, டீ.வீரசிங்க, ஏ.எல்.எம். அதாவுல்லா, அலி சாஹிர் மௌலானா, பிரதம செயலாளர்ஆர்.எம்.கே.எஸ். ரத்நாயக்க, மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் டவலியு. திசாநாயக்க உட்பட பல அரச அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment