இலங்கையில் 23 வீதத்தினர் நீரிழிவு நோயால் பாதிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, November 6, 2023

இலங்கையில் 23 வீதத்தினர் நீரிழிவு நோயால் பாதிப்பு

நாட்டில் 23 சதவீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை உட்சுரப்பியல் நிபுணர்கள் கல்லூரி மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

நீரிழிவு நோயால் ஆபத்திலுள்ள உலகின் முதல் பத்து நாடுகளுக்குள் இது, உள்ளதாகவும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

நீரிழிவு நோய் தொடர்பில், கருத்து தெரிவித்த கொழும்பு பல்கலைக்கழக மருத்துவத்துறை பேராசிரியர் வைத்தியர் பிரசாத் கட்டுலந்த, நீரிழிவு நோய் காரணமாக இலங்கையில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நாட்டில், 2006 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், இலங்கையின் சனத் தொகையில் 10 சதவீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நீரிழிவு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ துறை பேராசிரியர் வைத்தியர் பிரசாத் கட்டுலந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment