தற்போதைய பொலிஸ்மா அதிபர் C.D.விக்ரமரத்னவிற்கு மேலும் மூன்று வார கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று (03) முதல் அமுலாகும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ்மா அதிபர் C.D.விக்ரமரத்னவிற்கு இதற்கு முன்னர் வழங்கப்பட்ட சேவை நீடிப்பு நேற்றுடன் நிறைவடைந்திருந்தது.
தற்போதைய பொலிஸ்மா அதிபர் C.D.விக்ரமரத்னவிற்கு இதற்கு முன்னர் மூன்று தடவை சேவை நீடிப்பு வழங்கப்பட்டிருந்தது.
03 மாதங்கள் என்ற அடிப்படையில் இரண்டு சந்தர்ப்பங்களிலும், மூன்று வாரங்கள் அடிப்படையில் ஒரு தடவையும் சேவை நீடிப்பு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment