அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது - News View

About Us

About Us

Breaking

Friday, November 3, 2023

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது

மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அவசர மத்திய செயற்குழு கூட்டத்தின்போது, இது தொடர்பில் இறுதி இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அதன் செயலாளர் ஹரித்த அளுத்கே குறிப்பிட்டார்.

இதற்கமைய, இன்று நண்பகல் 12 மணியுடன் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.

தமக்கு கிடைக்கப் பெற்றுள்ள ஜனாதிபதியின் பதில் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு, தாம் அறிவித்துள்ள பல்வேறு தொழிற்சங்க நடவடிக்கைகளில், மக்களை நேரடியாகப் பாதிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக ஹரித்த அளுத்கே குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகருடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின்போது ஏற்படுத்தப்பட்ட இணக்கப்பாடு உள்ளிட்ட விடயங்களுக்கு அமைய, மாகாண மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

No comments:

Post a Comment