சிபெட்கோ எரிபொருட்களின் விலையை அதிகரித்தது! - News View

About Us

About Us

Breaking

Sunday, October 1, 2023

சிபெட்கோ எரிபொருட்களின் விலையை அதிகரித்தது!

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் இன்று (01) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது.

இதன்படி 
ஒக்டைன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலையை 4 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன்படி புதிய விலை 365 ரூபாவாகும்.

ஒக்டைன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலையை 3 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன்படி புதிய விலை 420 ரூபாவாகும்.

ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலையை 10 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன்படி புதிய விலை 351 ரூபாவாகும்.

சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலையை 62 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன்படி புதிய விலை 421 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலையை 11 ரூபாவால் அதிகரித்துள்ளது. இதன்படி புதிய விலை 242 ரூபாவாகும்.

இதனிடையே, இன்று (01) மாலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் சினோபெக் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment