சிறுவர்களின் எதிர்காலத்தினை பாதுகாக்க வேண்டுமானால் நாட்டிலிருந்து போதைப் பொருளை முற்றாக இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மகளிர் விவகார சிறுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் போதைப் பொருள் வர்த்தகத்தை முற்றாக இல்லாதொழிக்க நடவடிக்கை எடுப்பதுடன் நாட்டுக்குள் போதைப் பொருட்களை கொண்டுவரும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் உலக சிறுவர் தினத்தையொட்டிய நிகழ்வுகளில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருவதால் சமூகத்தில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருவதாகவும் அதனால் பெண்களே அதிகளவில் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனை கவனத்திற் கொண்டு போதைப் பொருள் தொடர்பான குற்றங்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment