இலங்கையின் நுவன் இந்திக்க கமகே, பிரதீப் சோமசிறி ஆகியோர் 2023 ஆசிய பரா விளையாட்டு போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றனர்.
ஆசிய பரா விளையாட்டு போட்டி சீனாவின் Guangzhou வில் நடைபெறுகின்றது.
இன்று (24) நடைபெற்ற ஆடவருக்கான 100 மீட்டர் T44 பிரிவு ஓட்டப்போட்டியை இந்திக்க நுவன் கமகே 11.63 விநாடிகளில் கடந்தார். இது போட்டிச் சாதனையாக பதிவானது.
இதேவேளை, ஆடவருக்கான 1500 மீட்டர் T46 பிரிவு ஓட்டப்போட்டியில் இலங்கையின் பிரதீப் சோமசிறி தங்கப்பதக்கம் வென்றார்.
நான்கு நிமிடங்கள் 5.1 விநாடிகளில் அவர் போட்டித்தூரத்தை கடந்ததுடன், இதுவும் போட்டிச் சாதனையாக பதிவானது.
No comments:
Post a Comment