இலங்கையில் புதிய வகை நுளம்பு அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
தவளைகளின் இரத்தத்தை மாத்திரம் உறிஞ்சும் புதிய நுளம்பு வகையொன்று நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
கம்பஹா, மீரிகம - ஹந்துருமுல்ல பகுதியில் குறித்த நுளம்பு வகை அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்தாபனத்தின் பூச்சியியல் விஞ்ஞானப் பிரிவின் பூச்சியியல் விஞ்ஞான அதிகாரி கயான் ஸ்ரீ குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
2 முதல் 3 மில்லி மீட்டர் நீளமுடையதாக குறித்த வகை நுளம்பு காணப்படுவதாகவும் பூச்சியியல் விஞ்ஞானப் பிரிவின் பூச்சியியல் விஞ்ஞான அதிகாரி கயான் ஸ்ரீ குமாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நுளம்பு வகைகளின் எண்ணிக்கை 156 ஆக உயர்வடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்த வகை நுளம்பு 108 வருடங்களுக்கு முன்னர் தென் கொரியாவில் அடையாளம் காணப்பட்டதுடன் தொடர்ந்து தாய்லாந்திலும் அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்போது இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment