கொவிட் தடுப்பூசியை உருவாக்க உதவிய இரு விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு - News View

About Us

About Us

Breaking

Monday, October 2, 2023

கொவிட் தடுப்பூசியை உருவாக்க உதவிய இரு விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு

கொவிட் தொற்றுநோய்க்கான எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளை கண்டுபிடிக்க வழிவகுத்த தொழில்நுட்பத்தை உருவாக்கிய இரண்டு விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

டொக்டர் கேட்டலின் கரிகோ மற்றும் டொக்டர் ட்ரூ வேஸ்மேன் ஆகியோர் இதைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

இந்தத் தொழில்நுட்பம் பெருந்தொற்றுப் பேரிடருக்கு முன் சோதனை கட்டத்திலேயே இருந்தது. ஆனால், தற்போது அது உலகம் முழுவதும் பல கோடி உயிர்களைக் காப்பாற்றி வருகிறது.

கொவிட் தொற்றுநோய்க்காக உருவாக்கப்பட்ட இந்த எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பம் தற்போது புற்றுநோய் உட்படப் பல்வேறு நோய்களுக்கும் பலன் தருமா என்பது குறித்த ஆய்வுகள் நடந்து வருகின்றன.

வைரஸ், பக்டீரியா போன்ற அச்சுறுத்தல்களை அடையாளம் கண்டு எதிர்செயலாற்ற நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தயார்படுத்தும் வேலையை தடுப்பூசிகள் செய்கின்றன.

கொவிட் பேரிடரின்போது உருவாக்கப்பட்ட, மொடர்னா, பைசர் ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் எம்.ஆர்.என்.ஏ தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டவையாகும்.

No comments:

Post a Comment