சர்ச்சைக்குரியதாக கடந்த காலங்களில் சமூக ஊடகங்களில் வெளியான ராஜபக்ஷவின் திருமண வைபவத்திற்காக மின்சார கட்டணம் தொடர்பான செய்திக்கு இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த முற்றுப்புள்ளிவைத்துள்ளார்.
தங்காலையில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வைபவத்திற்காக மின்சார கட்டணம் தொடர்பான செய்தியில் சுமார் 26 இலட்சம் ரூபாய் நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த 26 இலட்சம் ரூபா மின்சார கட்டணத்தை நேற்று (2) செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, திருமண நிகழ்வில் பாதுகாப்பு நோக்கில் கூடுதலான மின் குமிழ்கள் ஒளிர விடப்பட்டதாகவும் இந்த செலவினை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாய்மொழி மூலமாக கோரிக்கைக்கு அமைய இலங்கை மின்சார சபை இந்த மின்சார வசதியை வழங்கி இருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் நாமல் ராஜபக்சவை திருமணம் செய்து இரண்டாவது குழந்தை பிறந்ததன் பின்னர் இந்த மின்சார கட்டணம் குறித்த பட்டியல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்ததாகவும் தாம் இந்த கட்டணத்தை செலுத்தி பிரச்சினையை முடிப்பதற்கு தீர்மானித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும் அரசியலில் அவருக்கு ஆதரவாக இருந்த நண்பர் என்பதாலும் தான் இந்த பிரச்சினையை தீர்த்து வைத்ததாக இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நான் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் சார்பாக மின்சார சபைக்கு மொத்த மின்சார கட்டணமான 2,682,246.57 ரூபாவை செலுத்தினேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment