இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் வண்டிகளில் பயணச்சீட்டின்றி பயணிப்பதற்கான அபராதத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்மானத்துக்கிணங்க அபராதம் மூவாயிரம் ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.
பயணச்சீட்டின்றி பயணிப்போர் மூவாயிரம் ரூபா அபராதத்துடன், இரு மடங்கு கட்டணத்தை செலுத்த செலுத்த நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகளில் பயணச்சீட்டின்றி பயணிப்பதால் நாளாந்தம் சுமார் 70 இலட்சம் ரூபா நட்டம் ஏற்படுகிறது. இதையடுத்தே இலங்கை போக்குவரத்து சபை இத்தீர்மானத்தை எடுத்துள்ளது.
இது தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள், தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அடுத்த வருடம் இச்சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி. அல்விஸ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment