பாரிய சொத்துக்களைக் கொண்ட நபர்களிடமிருந்தே 2025 ஆம் ஆண்டு முதல் சொத்து வரியை அறவிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைக்கு இணங்கவே அரசாங்கம் இந்த வரியை அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் பாரிய அளவில் சொத்துக்களை கொண்டுள்ள நபர்களிடமிருந்தே இந்த வரியை அறவிடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாரிய சொத்துக்களைக் கொண்டுள்ளவர்களின் காணிகள் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் முறையான கணக்குகள் கிடையாது என்பது தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள இராஜாங்க அமைச்சர், அது தொடர்பில் தற்போது பெருமளவு யோசனைகள் நிதியமைச்சுக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த யோசனைகள் தொடர்பில் நிதியமைச்சானது உயர் மட்டத்தில் அவதானத்தை மேற்கொள்ளும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment