தனது முகநூல் பதிவில் இஸ்லாத்தையும் அல்லாஹ்வையும் அவமதித்து பதிவிட்ட முதித்த ஜயசேகர எனும் நபர் கணினி குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நேற்று (26) கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிவான் சந்தேகநபரை பிணையில் விடுவித்ததுடன் எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்தார்.
சந்தேகநபர் 291 ஏ மற்றும் 291 பீ சட்ட பிரிவின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக கணினி குற்றவியல் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.
சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சந்தேகநபர் மனநிலை பாதிக்கப்பட்டவரென வைத்திய அறிக்கைகள் தெரிவிப்பதால் பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.
முறைப்பாடுகளை முன்வைத்த முஸ்லிம் தரப்பு சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டனர்.
சந்தேகநபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனில் உத்தியோகபூர்வமாக வைத்திய அத்தாட்சிப்பத்திரம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என வாதிட்டனர்.
அதுவரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறும் அவர் சமூகத்திற்கு ஆபத்தானவர் என்றும் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் குறித்த நபருக்கு எதிராக ஐசிசிபிஆர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யுமாறும் கோரிக்கை விடுத்தார்.
இந்நிலையில் அரச மருத்துவ அதிகாரியிடம் சந்தேகநபரின் மனநிலை தொடர்பான மருத்துவ அறிக்கையைப் பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
சந்தேகநபருக்கு எதிராக முஸ்லிம்களும் முஸ்லிமல்லாதவர்களும் என மொத்தம் 14 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் ஆகிய அமைப்புகளும் முறைப்பாடுகளை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
Vidivelli
No comments:
Post a Comment