போதையில் பஸ்ஸை செலுத்திய சாரதிக்கு அனுமதிப்பத்திரம் இரத்து - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 24, 2023

போதையில் பஸ்ஸை செலுத்திய சாரதிக்கு அனுமதிப்பத்திரம் இரத்து

போதையில் பயணிகளுடன் வாகனத்தை செலுத்திய இலங்கை போக்குவரத்து சபையின் சாரதியின் சாரதி அனுமதிப்பத்திரம் இரத்து செய்யப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறையில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸினை ஊர்காவற்துறை பொலிஸார் மறித்து சோதனையிட்டபோது, சாரதி போதையில் இருந்ததை கண்டறிந்தனர்.

பொலிஸார் சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்று (23) சாரதியை பொலிஸார் முற்படுத்தியபோது, சாரதி தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டார்.

அதனை அடுத்து, அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை ஒரு வருட காலத்திற்கு மன்று இரத்து செய்து உத்தரவிட்டது. அத்துடன் 30 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டது.

யாழ்.விசேட நிருபர்

No comments:

Post a Comment