கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கான விசேட சுற்றறிக்கை ! - News View

About Us

About Us

Breaking

Monday, October 16, 2023

கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கான விசேட சுற்றறிக்கை !

கிழக்கு மாகாண பாடசாலை ஆசிரியர்களுக்கான விசேட சுற்று நிருபமொன்றை மாகாண கல்விச் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

கிழக்கு மாகாண பாடசாலைகளின் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு தாங்கள் கற்பிக்கும் பாடத்தை பாடசாலை நேரத்துக்கு அப்பால் வெளியே அல்லது வார இறுதி நாட்களில் கட்டண அடிப்படையிலான பயிற்சி வகுப்புகள் நடத்தி கற்பிக்க முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறித்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை கடைப்பிடிக்காத ஆசிரியர்கள் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள், பாட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பாடசாலை மேலதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை மீறும் ஆசிரியர்கள் குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் முறைப்பாடு செய்ய மாகாண கல்வி அமைச்சின் உள்ளக கணக்காய்வு பிரிவிற்கு அல்லது 24 மணி நேர ஆளுநரின் பொது முறைப்பாடுகள் பணியகத்தை 0267500500 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என சுற்றறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த மாகாண கல்விச் செயலாளர் சட்டத்தரணி எச்.இ.எம்.டபிள்யூ.கிதாஞ்சன திஸாநாயக்க, ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் பாடத்தை அந்த வகுப்பின் மாணவர்களுக்கு மட்டுமன்றி பொதுத் தரங்களுக்கும் பணத்திற்காக கற்பிப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment