சீரற்ற வானிலை காரணமாக, இலங்கை வந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான 2 விமானங்கள் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையம் நோக்கி திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
அந்த வகையில், இந்தோனேஷியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து கொழும்பு நோக்கி வருகை தந்த UL 365 விமானம் மற்றும் மாலைதீவின் தலைநகர் மாலியிலிருந்து கொழும்பு நோக்கி வருகை தந்த UL 116 விமானம் ஆகிய விமானங்களே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.
தற்போது பெய்து வரும் மழை மற்றும் சீரற்ற மற்றும் தெளிவற்ற வானிலை காரணமாக பண்டாரநாயக்க கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தள விமான நிலையங்களில் குறித்த விமானங்களை தரையிறக்க முடியாத நிலையில், இவ்விமானங்கள், இந்தியாவின் கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டதாக, ஶ்ரீ லங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment