கொழும்பு, டுப்ளிகேஷன் வீதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததால் குறித்த பாதையின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் தற்போது மழை பெய்து வரும் நிலையில், குறித்த மரம் பாதையில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி, கார், வேன் ஆகியவற்றின் மீது இவ்வாறு முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வீதியின் ஊடாக பயணிப்போர், முடிந்தவரை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment