14 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நொக்கியா - News View

About Us

About Us

Breaking

Friday, October 20, 2023

14 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் நொக்கியா

பின்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட நொக்கியா நிறுவனம், ஸ்மார்ட்போன் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், இவ்ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நொக்கியா உபகரணங்களின் விற்பனை 19 சதவீதம் சரிந்துள்ளது. இதனால் இலாபமும் குறைந்துள்ளது. எனவே, 14,000 ஊழியர்கள் வரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

நொக்கியா உலக சந்தையில் செல்போன் முதல் நெட்வொர்க் சாதனங்கள் வரை பிரபலமான நிறுவனம் ஆகும். 2007 ஆம் ஆண்டின் இறுதியில், உலக அளவிலான ஸ்மார்ட்போன் விற்பனையில் பாதி அளவுக்கு நொக்கியா போனாக இருந்தது.

2010ஆம் ஆண்டுக்குப் பிறகு விற்பனையில் சரிவை சந்தித்தது. எனினும் முன்னணி நிறுவன தயாரிப்புகளுக்கு இணையாக புதுப்புது மொடல்களை அறிமுகம் செய்து உலக சந்தையில் போட்டி போடுகிறது.

அதேசமயம், சவாலான சந்தை சூழலை எதிர்கொள்ள, செலவுகளைக் குறைத்து செயல்திறனை அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. 2026ஆம் ஆண்டின் இறுதிக்குள் செலவுகளைக் கட்டுக்குள் கொண்டுவர இலக்கு வைத்துள்ளது.

நொக்கியாவில் தற்போது 86,000 ஊழியர்கள் பணியாற்றுகிறார்கள். ஆட்குறைப்புக்கு பிறகு 72,000 முதல் 77,000 வரையிலான ஊழியர்கள் இருப்பார்கள் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment