மக்கள் உயிர் வாழ்வதற்கும் முடியாத நிலை என்கிறார் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் - News View

About Us

About Us

Breaking

Monday, September 4, 2023

மக்கள் உயிர் வாழ்வதற்கும் முடியாத நிலை என்கிறார் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

(எம்.வை.எம்.சியாம்)

வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு நாட்டு மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். நாட்டின் சுகாதாரத் துறையின் பிரச்சினைகள் மாத்திரம் அல்ல மக்கள் உயிர் வாழ்வதற்கும் கூட முடியாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில் அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு உடனடியாக பதில் வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, வரலாற்றில் என்றும் இல்லாதவாறு மக்கள் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். நாட்டில் சுகாதாரத் துறையின் பிரச்சினைகள் மாத்திரம் இன்றி மக்களுக்கு உயிர் வாழ்வதற்கும் கூட முடியாத நிலை காணப்படுகிறது.

சுகாதாரத்துறையை எடுத்துக் கொண்டால் மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்து கொள்வனவு, விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் வெளியேற்றம் என பிரச்சனைகளை அடிக்கிக் கொண்டே போகலாம்.

ஆசியா நாடுகளில் மருந்து கொள்வனவுக்கு அதிகம் நிதி ஒதுக்கும் நாடாக இலங்கை காணப்படுகிறது. இந்த நிலையில் சுகாதாரத் துறையில் பல பிரச்சினைகள் உள்ளன. இது மக்களின் உயிர் தொடர்பிலான முக்கிய பிரச்சினை. இதற்கு அரசாங்கத்திடம் எந்தவொரு தீர்வுகளும் இல்லை. அரசாங்கத்தின் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதற்கு பதில் வழங்க வேண்டியுள்ளது.

எமது அரசாங்கத்தில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவோம். பொருளாதாரம், சுகாதாரம், விவசாயம் என அனைத்து துறைகளிலும் தெளிவான கொள்கைகளை கொண்டு பயணிப்போம். நாட்டை கட்டியெழுப்ப சரியான தீர்மானங்களை முன்னெடுக்க வேண்டும்.

தவறான தீர்மானங்கள் எடுப்பதை நிறுத்த வேண்டும். சமூகத்தில் உயர் மட்டத்தில் உள்ளவர்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கக்கூடாது. வறிய கோட்டின் கீழ் வாழும் மக்களின் நிலைமை கண்டு ஆட்சியாளர்கள் கவலை அடைவதில்லை என்றார்.

No comments:

Post a Comment