மதுபானத்தை வாங்கி விட்டு பணத்தை செலுத்தாது தப்பியோடிய பொலிஸ் பரிசோதகர் - News View

About Us

About Us

Breaking

Saturday, September 9, 2023

மதுபானத்தை வாங்கி விட்டு பணத்தை செலுத்தாது தப்பியோடிய பொலிஸ் பரிசோதகர்

முச்சக்கர வண்டி ஒன்றில் வந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இரண்டு மதுபானசாலைகளுக்கு சென்று மதுபானத்தை பெற்றுக் கொண்டுவிட்டு பணத்தை செலுத்தாது தப்பியோடும் காட்சிகள் சி.சி.ரி.வி. கெமராக்களில் பதிவாகியுள்ளது.

குறித்த சமபவம் நேற்று வெள்ளிக்கிழமை (8) காலை 11.30 மணியளவில் மட்டக்களப்பு நகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

மதுபானசாலைக்கு சென்று அரை போத்தல் மதுபானத்தை வாங்கி விட்டு பணத்தை தருவதாக கூறி விட்டு மதுபான போத்தல்களுடன் முச்சக்கர வண்டியில் குறித்த பொலிஸ் பரிசோதகர் தப்பி ஓடியுள்ளார்.

இதேபோன்று மற்றுமொறு மதுபானசாலைக்குச் சென்ற குறித்த பொலிஸ் பரிசோதகர் அங்கும் அரை போத்தல் மதுபானத்தை வாங்கி விட்டு பணத்தை எடுத்து வருவதாக தெரிவித்து மதுபானத்துடன் முச்சக்கர வண்டியில் தப்பியோடியுள்ளார்.

இந்தக் காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி. கமெராக்களில் பதிவாகியுள்ள நிலையில், அவை சமூக ஊடகங்களில் வைராலகியுள்ளது.

No comments:

Post a Comment