சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை நாய் என தெரிவித்து அவரை கொலை செய்ய வேண்டும் என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார் என ஹன்சீர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான வௌிக்கொணர்வுகள் இருப்பதாக இதற்கு முன்னர் தகவல் வௌியான நிலையில், அது தொடர்பான Dispatches நிகழ்ச்சி நேற்றிரவு ஔிப்பரப்பானது.
இந்த அறிக்கையில் நிகழ்ச்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் Sunday Leader ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பிலான தகவல்களும் உள்ளடங்கியிருந்தன.
பிள்ளையான என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துறை சந்திரகாந்தனின் ஊடகப் பேச்சாளர் மற்றும் நிதிச் செயலாளராக செயற்பட்ட ஹன்சீர் அசாத் மௌலானா மற்றும் தற்போது நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் திட்டமிட்ட குற்றச் செயல்களை தடுக்கும் விசாரணைப் பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரியான பொலிஸ் இன்ஸ்பெக்டர் நிஷாந்த டி சில்வா ஆகியோரும் பெயர் குறிப்பிடாத அரச அதிகாரி ஒருவரும் இந்த நிகழ்ச்சியில் பல விடயங்களை வௌிக்கொணர்ந்துள்ளனர்.
மிக் விமான கொள்வனவில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் லசந்த விக்கிரமதுங்க செய்திகளை வெளியிட்டமை கோட்டாபய ராஜபக்ஷவை கடும் சீற்றத்திற்குள்ளாக்கியது ஹன்சீர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
பிள்ளையானையும், என்னையும் அவசர சந்திப்பிற்கு அழைத்த கோட்டாபாய ராஜபக்ஷ லசந்த விக்கிரமதுங்க கொலை செய்யப்ப வேண்டும் என தெரிவித்தார் என சனல் 4 க்கு ஹன்சீர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
நாங்கள் கோட்டபாயவை அவரது அறையில் சந்தித்தோம் அவரது மேசையில் சண்டே லீடர் காணப்பட்டது என குறிப்பிட்டுள்ள ஹன்சீர் அசாத் மௌலானா, கோட்டாபய ராஜபக்ஷ லசந்த விக்கிரமதுங்கவை பல்லா நாய் என குறிப்பிட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நாய் எப்போதும் என்னுடன் மோதுகின்றது இந்த நாயை கொலை செய்ய வேண்டும் உங்களால் முடிந்தளவு வேகமாக அதனை செய்யுங்கள் என கோட்டாபய தெரிவித்தார் எனவும் ஹன்சீர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment